ADVERTISEMENT

"சென்சார் போர்டு அடிபணிந்துவிட்டது" - தி கேரளா ஸ்டோரி படத் தயாரிப்பாளர்

06:02 PM May 17, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இப்போது வரை ரூ.150 கோடியை கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் டீசர் வெளியான பின்பு தொடர் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதனிடையே தமிழகத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் கடந்த 7 ஆம் தேதி மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன. அதன்படி படம் திரையிடப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் இப்படத்தை திரையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்படம் கடந்த 12 ஆம் தேதி இங்கிலாந்தில் இந்தி மற்றும் தமிழில் வெளியாக இருந்தது. ஆனால் அந்நாட்டில் தணிக்கை குழு சான்றிதழை வழங்காததால் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது. இந்நிலையில் இப்படம் இன்று முதல் அங்கு வெளியாகிறது. இது குறித்து இயக்குநர் சுதிப்தோ சென், “பிரிட்டன் வென்றுவிட்டது. பயங்கரவாதம் தோற்றது. இப்போது பிரிட்டிஷ் மக்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான மிகப்பெரிய புரட்சியைப் பார்ப்பார்கள்" என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்படம் இங்கிலாந்தில் வெளியாவது குறித்து தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா பேசுகையில், "பிரிட்டனின் சென்சார் சான்றிதழ் நிறுவனம் நேற்று சான்றிதழை வழங்க வேண்டி இருந்தது. அங்கு பொதுமக்களின் அழுத்தம் அதிகமாக இருந்தது. சில அரசியல்வாதிகள் சட்ட விரோதமாக படத்தை நிறுத்த முயன்றனர். பிரிட்டனின் சென்சார் போர்டு பொதுமக்களின் அழுத்தத்திற்கு முன் அடிபணிய வேண்டியதாயிற்று. அதனால் இன்று படம் வெளியாகியுள்ளது" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT