விபுல்அம்ருத்லால்ஷா தயாரிப்பில்சுதிப்தோசென்இயக்கத்தில்அதாசர்மா, சித்திஇட்னானிஉள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கேரளாஸ்டோரி. இப்படத்தின்டீசர்வெளியான முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்ததோடு, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் வழக்கின் விசாரணையின் போதுபடத்திற்குக்கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இப்படிப்பல எதிர்ப்புகள் வந்தாலும் படம் அனைத்து மாநிலங்களிலும்திரையரங்கில்வெளியானது. ஆனால் தமிழகத்தில் இந்த படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்ததும்,மல்டிப்ளெக்ஸ்திரையரங்கங்கள் தி கேரளஸ்டோரிபடம் திரையிடப்படாது என்று அறிவித்தன. இருப்பினும் ஒரு சிலதிரையரங்குகளில்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் யாரும் படம் பார்க்க வரவில்லை என்று கூறி படம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி படம்வெளியாவதற்குமுன்பு, பின்பு ஏகப்பட்டசர்ச்சைகளைக்கிளப்பிய இந்த படத்தை பாஜக மற்றும் வலது சாரிகள் தொடர்ந்து ஆதரித்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் தி கேரளஸ்டோரிபடத்தைபார்த்துவிட்டு ஆதரவாகட்விட்செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளட்விட்டர்பதிவில், “தி கேரளாஸ்டோரி”படத்தைப்பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி”எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தி கேரளா ஸ்டோரி” படத்தை பார்த்தேன்.
ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி.: ஆளுநர் ரவி@PMOIndia @HMOIndia @MIB_India @pibchennai @ANI @PTI_News
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 21, 2023