ADVERTISEMENT

தனுஷின் அடுத்த பட இயக்குனரை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்      

05:23 PM Oct 30, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ்,வட சென்னை ,அசுரன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை தந்து வருகிறார். இவர் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்திலும், அத்ராங்கி ரே என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.

ADVERTISEMENT


தனுஷ், அடுத்ததாக சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார்.இதை தொடர்ந்து தனுஷ், ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கும் படத்தில் நடிப்பதாகவும், அப்படத்தையும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் எனவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில் இத்தகவலை, சத்ய ஜோதி பிலிம்ஸ் உறுதி செய்துள்ளது. இயக்குனர் ராம்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, அந்நிறுவனம் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் தனுஷின் அடுத்த படத்தில் உங்களோடு இணைவது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளது. இப்படம் விண்வெளி தொடர்புடைய சயின்ஸ் திரில்லர் படம் எனவும் தகல்வல்கள் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT