ADVERTISEMENT

“ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும்” -திருமணமான பூனம் பாண்டே! 

11:03 AM Sep 12, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

பல வருடங்களாக எதையாவது சொல்லி அல்லது வீடியோ, புகைப்படங்கள் வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியே பிரபலமானவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ADVERTISEMENT

இப்படி சுய விளம்பரத்திற்காக எதையாவது பரபரப்பாக செய்து ட்ரெண்ட் ஆகும் பூனம் பாண்டே, ஊரடங்கு காலத்திலும் தனது காதலருடன் காரில் பயணம் மேற்கொண்டு சிக்கினார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

பூனம் பாண்டேவுக்கும் அவரது காதலர் சாம் பாம்பேவுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது பூனம் பாண்டே - சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் பூனம் பாண்டே, ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT