
கடந்த 2020 ஆம் ஆண்டு கோவாவில் உள்ள சபோலி அணையில் நிர்வாண படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக பூனம் பாண்டே மீது குற்றம் சாட்டப்பட்டது. அதன் பிறகு நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது முன்னாள் கணவர் சாம் பாம்பே ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பட்டப்பகலில் ஆபாச வீடியோ எடுத்ததைத் தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய கனகோனா காவல் ஆய்வாளர் துக்காராம் சவான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து இவ்வழக்கில் பூனம் பாண்டே மற்றும் அவரது முன்னாள் கணவர் சாம் பாம்பே ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே மற்றும் அவரது முன்னாள் கணவர் சாம் பாம்பே ஆகிய இருவர் மீதும் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் இதில் 39 சாட்சிகள் சேர்க்கப்பட்ட உள்ளதாகவும், விரைவில் இவ்வழக்கின் விசாரணை தொடங்கும் எனவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.