ADVERTISEMENT

"அவர் என்னிடம் மிகவும் திமிராக நடந்து கொண்டார்" - நடிகை பூஜா ஹெக்டே குற்றச்சாட்டு

06:35 PM Jun 09, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டேவுக்கு இங்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு பக்கம் சென்ற அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'அலா வைகுண்டபுரம் லோ' படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அந்த படத்தில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா' பாடல் இவரைப் பட்டிதொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்து தமிழில் ரீஎண்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படமும் போதிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் படத்தின் பாடல்கள் பெருமளவில் ஹிட்டடித்தது. தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மும்பையில் இருந்து புறப்படும் இண்டிகோ விமானத்தில் பயணித்த போது அந்த விமானத்தில் பணிபுரியும் ஊழியர் விபுல் நாகேஷே தன்னிடம் ரொம்ப திமிராக நடந்து கொண்டார். பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனைகள் குறித்து ட்வீட் செய்வதில்லை. ஆனால் இது பயங்கரமாக இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT