ADVERTISEMENT

சோழர் பெருமை ; அஞ்சாத பாதுகாவலர்களை அறிமுகப்படுத்திய 'பொன்னியின் செல்வன்' படக்குழு

06:34 PM Sep 01, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படக்குழு தற்போது கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதன் படி "சோழர் பெருமையின் அஞ்சாத பாதுகாவலர்களை சந்திக்கவும்" என்று குறிப்பிட்டு 'பெரிய பழுவேட்டரையர்' கதாபாத்திரத்தில் சரத்குமாரும் 'சின்ன பழுவேட்டரையர்' கதாபாத்திரத்தில் பார்த்திபனும் நடித்துள்ளதாக தங்களது சமூக வலைதள பக்கத்தில்தெரிவித்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தகக்கத்து.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT