ponniyin selvan parthiban start his promotion

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன் 1' படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படம் திரைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் படக்குழு.

Advertisment

அந்த வகையில் பார்த்திபன், என்னுடைய புரொமோஷன் குதிரை சவாரி என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சோழ தேசம் நோக்கி…பொன்னியின் செல்வனில் நான் வரும் காட்சிகள் சொற்பமே. என் பாத்திரத்தின் பெயரிலேயே ’சின்ன’ உள்ளது. எனவே…எதிர்பார்ப்பே இல்லாமல் ஒரு சரித்திர பதிவு, மாபெரும் முயற்சி, வெற்றி பெற என்னால் இயன்ற புரொமோஷன் குதிரை சவாரி. பொன்னியின் செல்வனை கொண்டாடுவோம்" என குறிப்பிட்டு தான் குதிரையில் சவாரி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Advertisment

இதனிடையே பார்த்திபன் வருகிற 30ஆம் தேதி தஞ்சையில் 'பொன்னியின் செல்வன் 1' படத்தை காலை 11 மணிக்கு பார்க்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.