ADVERTISEMENT

'கழுகு 2' படப்பிடிப்பு தளத்தை சுற்றிவளைத்த அதிரடிப்படை போலீசார்.

11:04 AM Jul 18, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருவது வாடிக்கையாகும். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில் தனியாருக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா நடித்துவரும் 'கழுகு 2' படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இந்த இடத்தை சுற்றிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடு உள்ளது. இந்த படத்தில் செந்நாய்களை கிருஷ்ணா வேட்டையாடும் காட்சி இடம் பெறுகிறது. ஆகாயத்தில் பறந்தவாறு செந்நாய்களை குறி தவறாமல் கிருஷ்ணா சுட வேண்டும். இதற்காக அடர்ந்த காட்டுப்பகுதியில் நடிகர் கிருஷ்ணா ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து துப்பாக்கி சுடும் பயிற்சியை எடுத்து கொண்டிருந்தார்.

அப்போது தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் பீதியான மக்கள் மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அந்த பகுதிக்கு விரைந்த அதிரடிப் படையினர் துப்பாக்கி முனையில் நடிகர் கிரிஷ்ணாவையும், அவரது உதவியாளர்களையும் சுற்றி வளைத்தனர். பிறகு அருகில் சென்று பார்த்த போது தான், அது திரைப்படத்திற்கான ஒத்திகை என்பது அவர்களுக்கு தெரிய வந்தது, இருப்பினும் துப்பாக்கியை ஆய்வு செய்த காவல்துறையினர், அது ஒரிஜினல் துப்பாக்கி என்றும், லைசென்சை காண்பித்து விட்டு துப்பாக்கியை பெற்று செல்லுமாறும் கூறியுள்ளனர். இந்த துப்பாக்கிகள் சென்னையைச் சார்ந்த 'கன்' ராஜ் என்பவருக்கு சொந்தமானது. இதையடுத்து 'கன்' ராஜ் துப்பாக்கிகளுக்கான லைசென்சை எடுத்துக்கொண்டு கைப்பற்றப்பட்ட தன் துப்பாக்கிகளை மீட்க கேரளா விரைந்துள்ளார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT