Skip to main content

கிருஷ்ணா பிந்து மாதவியுடன் மீண்டும் உருவாகும் கழுகு 2

Published on 28/06/2018 | Edited on 28/06/2018
kazhugu 2

 

 

 

கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற 'கழுகு' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ஜி.கே.ஸ்டூடியோஸ் சார்பில் தயாராகிறது. முதல் பாகத்தில் நடித்த கிருஷ்ணா, பிந்து மாதவி ஆகியோர் இதிலும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய சத்யசிவாவே இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பெரும்பாலும் முதல் பாகத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இந்த பாகத்திலும் இணைகின்றனர். இந்நிலையில் கழுகு-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று மூணாரில் துவங்கி அங்கேயே தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் இப்படப்பிடிப்பில் நடிகர்கள் கிருஷ்ணா, பிந்துமாதவி, காளி வெங்கட் ஆகியோர் கலந்துகொண்டனர்.  

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

வரலாற்று படம் உண்டு...அஜித் படம் உண்டு..! - விஷ்ணுவர்தன் பிளானை சொன்ன கிருஷ்ணா #Exclusive 

Published on 01/08/2019 | Edited on 01/08/2019
Krishna

 

 

கிருஷ்ணா - பிந்து மாதவி இணைந்து நடித்து வெற்றிபெற்ற 'கழுகு' படத்தின் இரண்டாம் பாகமான 'கழுகு 2' படம் இன்று வெளியான நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் கிருஷ்ணா நக்கீரனுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் விஷ்ணுவர்தன் - அஜித் கூட்டணி படம் குறித்து பேசியபோது....''விஷ்ணுவர்தன் தற்போது ஒரு ஹிந்தி படத்தை இயக்கி வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிய இன்னும் 6 முதல் 8 மாதங்கள் ஆகும். அண்ணனுக்கு வரலாற்று படம் இயக்கவும், அஜித்துடன் சேர்ந்து படம் பண்ணவும் ஆசை இருக்கிறது. ஆனால் இவை இரண்டும் ஒரே படத்தில் நடக்குமா என்றால் அது எனக்கு தெரியாது. ஏனென்றால் நாங்கள் இருவரும் சினிமாவை பற்றி வீட்டிலும், வெளியிலும் பேசிக்கொளவதில்லை'' என்றார்.