ADVERTISEMENT

இணையத்தில் வைரலாகும் 'அண்ணாத்த' தெலுங்கு டீசர்!

06:37 PM Oct 23, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் உருவாகிவருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். கரோனா பரவல், ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு காரணங்களால் இப்படத்தின் பணிகள் தடைப்பட்ட நிலையிலும், இயக்குநர் சிவாவின் துல்லியமான திட்டமிடல் காரணமாகத் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.

‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி தினத்தன்று திரைக்குவர உள்ள நிலையில், படத்தின் தமிழ் டீசரை கடந்த 14ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தமிழ் டீசர், யூடியூப் தளத்தில் ஒரு கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த நிலையில், 'அண்ணத்தா' படத்தின் தெலுங்கு டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் பெத்தன்னா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT