/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12_62.jpg)
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, இயக்குநர் சிவா இயக்கி வரும் படம் 'அண்ணாத்த'. குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்திற்கு, டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனையடுத்து, படக்குழு சென்னை திரும்பியது.
பின் சென்னையில் அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு நடத்திய படக்குழு, சில தினங்களுக்கு முன் மீண்டும் ஹைதராபாத் விரைந்தது. தற்போது, ஹைதராபாத்தில் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் இயக்குநர் சிவாவும் நடிகர் ரஜினிகாந்தும் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு நிறைவடைவது எப்போது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அண்ணாத்த படத்திற்கான மொத்தப் படப்பிடிப்பையும் மே 15ஆம் தேதிக்குள் நடத்திமுடிக்க இயக்குநர் சிவா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)