ADVERTISEMENT

“மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்துவிட்டால்...” - திமுக எம்.பி-க்கு நடிகர் பார்த்திபன் பதிலடி!

10:41 AM Oct 24, 2020 | santhoshkumar

ADVERTISEMENT


இந்திய மொழி சார்ந்த படங்களுக்கு, மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அதன்படி கடந்த வருடத்திற்கான விருது பட்டியலில் இரண்டு தமிழ்ப் படங்கள் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இதில் பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' படத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. இந்தப் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் ஒட்டுமொத்தப் படத்திலும் இருப்பதுபோன்ற திரைக்கதையை அமைத்திருந்தார் பார்த்திபன். படம் வெளியானபோதே இந்தப் படத்தின் புதுமை பலரையும் கவர்ந்தது.

இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படும் படத்தில் 'ஒத்த செருப்பு' படம் தேர்வாகவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், தற்போது மத்திய அரசின் விருதுக்கு ‘ஒத்த செருப்பு’ தேர்வாகி உள்ளது.

இதன்பின், தி.மு.க தர்மபுரி எம்.பி செந்தில்குமார், பார்திபனுக்கு கொடுக்கப்பட்ட இந்த விருது குறித்து ட்விட்டரில், “அண்ணனுக்கு பாஜகல ஒரு சீட் பார்சல்ல்ல்...” என்று தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த பார்த்திபன் வரிசையாக ட்வீட் மழைகளால் தி.மு.க எம்.பி செந்தில்குமாருக்குப் பதிலடி கொடுத்தார்.

“ ‘இரவின் நிழல்’ என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர, வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை! நாளையே மழை வரலாம், வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை! (மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாகக் கற்பனை செய்யவேண்டாம். அது ஒரு கொக்கி வார்த்தை - மேலும் படிக்க) பாரா’ளுமன்ற உறுப்பினர் திருமிகு Dr.S.செந்தில்குமார் அவர்கள் “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்”என்று sweet-ஆக tweet-ட்டி wit-டிருக்கிறார்.

செகு அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது comment box-ல் நிரம்பி வழிகிறது வசவுகள்! தொகுதி மேம்பாட்டுக்குப் பயன்படும் நேரத்தில் கீழ்த்தரமான comment போட்டதால், நெட்டிசன்கள் மீம்போட்டு மேம்பாட்டுப் பணியில் அசிங்கப்படுத்துகிறார்கள் அவரை. அதிலொன்று ‘MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்’ என்பதெல்லாம் அநாகரிகம். நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது (sorry for that). அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம்.

திரித்துப் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை. இவன் ‘படத்தில் “seat குடுத்தா நிப்பீங்களா?” என என்னிடம் கேட்க, “Seat குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?’ என இன்றுவரை joke-க்கி விட்டுமட்டும் நகர்கிறேன். சினிமாவில் இன்னுங் கொஞ்சம் stand செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை. எதிலும் சேர்வதில்லை. மற்றபடி மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு. ஆனால், அதற்குப் பெயர்தான் அரசியலா? என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்! உரியது கிடைக்காதபோது ஆனந்த’மாய் தூக்கி எறிந்துவிட்டு மேடை இறங்குவேனேத் தவிர, அதைத் “தா” இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்! அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதைப் பேராண்மையுடன் செய்வேன். உசுப்’பேத்தாதீங்க பாஸ்!!!” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT