Skip to main content

மான் வேட்டைக்கு வந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம்!

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

Deer issue forest officers fined

 

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சேர்வராயன் வடக்கு சரக பகுதியில் வனச்சரக அலுவலர் பரசுராமமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

அப்போது ஏற்காடு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஏரிமலை காப்புக்காடு பகுதியில் வலையுடன் சுற்றிக் கொண்டிருந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்த மாது (53) என்பதும், மான் வேட்டைக்காக வனத்திற்குள் நுழைந்து இருப்பதும் தெரிய வந்தது.

 

இதையடுத்து வனத்துறையினர் அவரை கைது செய்தனர். வனத்திற்குள் தடையை மீறி நுழைந்ததாக அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

நகைகள் கொள்ளை சம்பவம்; 48 மணி நேரத்தில் அதிரடியாக செயல்பட்ட போலீசார்

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

covai Jewelery shop incident The police took action within 48 hours

 

கோவை மாவட்டம் காந்திபுரம் நூறடி ரோட்டில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏசி வென்டிலேட்டர் வழியே துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர் ஒருவர் சுமார் 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணைக் காவல் ஆணையர் சண்முகம் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்டமாக அந்த கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது.

 

மேலும் கடைக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர் கடைக்குள் நுழைந்து நகைகளை திருடியது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட கடையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், 'ஒருவர் மட்டுமே உள்ளே புகுந்து நகைக் கடையில் கொள்ளை அடித்துள்ளது தெரியவந்துள்ளது. தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையன் பிடிபடுவார்' என்று தெரிவித்திருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த விஜயகுமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் மீது தருமபுரி மாவட்டத்தில் கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் இருப்பதும், போலீசார் இவரைத் தேடி வருவதும் தனிப்படை போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் ஆனைமலைக்கு விரைந்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவரது வீட்டிலும், அவரது நண்பர் சுரேஷ் என்பவர் வீட்டில் இருப்பது தெரியவந்துள்ளது.

 

covai Jewelery shop incident The police took action within 48 hours

 

இதனையடுத்து நகைக் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 2.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த கொள்ளையன் விஜயகுமார் வீட்டில் இருந்தும், ஆனைமலையில் உள்ள அவரது நண்பர் சுரேஷ் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொள்ளை போன 48 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நகைகளை பறிமுதல் செய்த போலீசார் கொள்ளையன் விஜயகுமாரையும், அவரது நண்பர் சுரேஷையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதே சமயம் இவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

நடு சாலையில் மளமளவென எரிந்த பேருந்து - தர்மபுரியில் பரபரப்பு

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Burnt bus in the middle of the road-Dharmapuri panic

 

தர்மபுரியில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை ஒட்டியுள்ள சேலம் தேசிய நெடுஞ்சாலை கெங்கலாபுரம் என்ற இடத்தில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பொள்ளாச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு சென்ற தனியார் பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் தர்மபுரி வழியாக பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து தீப்பிடித்து நடு சாலையிலேயே எரிந்தது.

 

அந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. யாருக்கும் எந்தவித காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. பேருந்து எரிந்து கரும்புகை வெளிப்பட்டதை தொடர்ந்து கெங்கலாபுரம் பாலத்தின் மீது தனியார் பேருந்து நிறுத்தப்பட்டது. ஓட்டுநரும் நடத்துநரும் இறங்கிய நொடியில் பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தர்மபுரியைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து தொப்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்