ADVERTISEMENT

பிரபல பாடகரின் வாழ்க்கை வரலாறு; ஆஸ்கர் வென்ற தயாரிப்பாளரின் அடுத்த பட அப்டேட்

06:07 PM Mar 15, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஆவணக் குறுப்படப் பிரிவில் ஆஸ்கர் வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்கள் அப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா. இதனால் பலரது கவனத்தை பெற்று அனைவரின் பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர். இவர்களின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் தயாரிப்பாளர் குனீத் மோங்கா அடுத்ததாக பிரபல பாடகர் யோயோ ஹனி சிங்கின் வாழ்க்கை சம்பவங்களை ஆவணப் படமாக தயாரித்து வருகிறார். இதனை மோசஸ் சிங் என்பவர் இயக்க நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த ஆவணப்படத்தில் அவரைப் பற்றிய ரசிகர்களுக்கு தெரியாத நிகழ்வுகளை இப்படத்தில் பார்க்கலாம் எனக் கூறுகின்றனர் படக்குழு.

இப்படத்தின் டீசர் இன்று வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது. இந்த டீசரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து தனது அடுத்த பட அப்டேட்டை தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் குனீத் மோங்கா. பாடகர் யோயோ ஹனி சிங், பல ஆல்பம் பாடல்களைப் பாடியுள்ளார். ராப் பாடகராக இந்திய அளவில் பிரபலமடைந்தவர். தமிழில் எதிர் நீச்சல் படத்தில் 'எதிர் நீச்சலடி... வென்று ஏற்றுக் கொடி' பாடலில் ராப் பகுதியை பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT