ADVERTISEMENT

"அவர் ஒரு சாக்லேட் பாய் என்கிற எண்ணமே எனக்கு ஏற்படவில்லை" - ஆச்சரியப்படும் நிகிலா விமல் 

02:39 PM Aug 17, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்தகம் படத்தில் நடித்துள்ள நடிகை நிகிலா விமல் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்.

தமிழில் எனக்கு நிறைய கதைகள் தேடி வந்ததில்லை என்பதுதான் உண்மை. பொதுவாக ஷூட்டிங் இல்லாத நேரங்களில் நான் கதை கேட்பேன். கதை கேட்கும்போது என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதை நான் பார்ப்பேன். சிறிய கேரக்டராக இருந்தாலும் நன்றாக நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தால் ஒப்புக்கொள்வேன். படத்தில் நமக்கான ஸ்பேஸ் இருக்க வேண்டும். சிறுவயதிலேயே நான் நடிக்க வந்துவிட்டேன். அது இப்போது வரை தொடர்கிறது.

சின்ன வயதில் முதலில் மலையாளத்தில் நடித்தேன். அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். அதில் பல படங்கள் ரிலீசாகவில்லை, ஷூட்டிங் பாதியோடு நின்றுபோனது. நான் நடிக்கும் சில படங்கள், சீரீஸ்கள் குறித்து என்னுடைய குடும்பத்தினருக்கே தெரியாது. பார்த்துவிட்டு அவர்கள் ஆச்சரியமாக கேட்பார்கள். 'மத்தகம்' படத்தில் என்னுடைய காட்சிகள் அதர்வா சாரோடு தான் அதிகம் இருக்கும். படத்தில் பல நடிகர்கள் இருந்தாலும் எனக்கு அவர்களோடு காட்சிகள் கிடையாது. க்ரைம் திரில்லர் படங்களை நான் அதிகம் பார்க்க மாட்டேன். ஆனால் தொடர்ந்து அதுபோன்ற படங்களில் நடித்து வருகிறேன்.

சசிகுமார் சாரோடு இரண்டு படங்கள் செய்திருக்கிறேன். அதற்கு முன் அவருடைய 'நாடோடிகள்' படத்தை மட்டுமே நான் பார்த்திருந்தேன். ஷூட்டிங்கின் போது அவர் 'சுப்ரமணியபுரம்' படத்தின் சிடியை கொடுத்து பார்க்கச் சொன்னார். அதர்வா சார் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கு நிறைய கற்றுத் தருவார். அவர் ஸ்ட்ரிக்டான ஒரு பாத்திரத்தில் நடிப்பதால் அவர் ஒரு சாக்லேட் பாய் என்கிற எண்ணமே எனக்கு ஏற்படவில்லை. தமிழ் சினிமாவில் நான் நடித்த நல்ல படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், இனி இங்கு நல்ல கேரக்டர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

நடிப்பைத் தவிர்த்து நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். கமல் சார் மீது எனக்கு க்ரஷ் ஏற்பட்டிருக்கிறது. நன்றாக பாட்டுப் பாடும் பல பாடகர்கள் மீது சிறுவயதில் க்ரஷ் ஏற்பட்டிருக்கிறது. நான் கொஞ்சம் முரட்டுத்தனமான பெண்ணாக இருப்பதால் இதுவரை எனக்கு ப்ரபோசல் வந்ததில்லை. என்னிடம் பேசவே பயப்படுவார்கள். ரொம்ப ஸ்வீட்டாக எனக்குப் பேச வராது. படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் வந்தால் எனக்கு சிரிப்பு வந்துவிடும். மணிகண்டன் தன்னுடைய கடின உழைப்பால் இந்த இடத்துக்கு வந்துள்ளது பெரிய விஷயம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT