Mathagam  movie press meet - Atharva speech

Advertisment

இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில்நடிகர்கள் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் மற்றும்டிடி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘மத்தகம்’வரும் ஆகஸ்ட் 18 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. இந்நிலையில் மத்தகம் சீரிஸின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வில் நடிகர் அதர்வா பேசியதாவது, “மத்தகம் இப்ப ரிலீஸாகுது.ஆனா இது 2018, 19ல ஆரம்பிச்சது. கௌதம் மேனன் சார் தான், இயக்குநர் பிரசாத் முருகேசனை அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கதை முதல்ல பைபிள் பேர்ல இருந்தது. பல மாற்றங்கள் வந்தது. எப்படி வரப்போகுதுன்னு தயக்கம் இருந்தது. இப்ப வரக் காரணம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தான்.அவங்களுக்கு ரொம்ப நன்றி. பிரசாத் சார் இந்தக் கதையை குயினுக்கு முன்னாடியே எழுதிட்டார். மத்தகம் கதை ரொம்ப சூப்பரா வந்திருக்கு. அவர் நினைச்சத கொண்டு வந்துருக்காரு. முழுக்க நைட்ல தான் ஷூட் பண்ணோம். லைட் ஆஃப் பண்ணி எடுத்தாங்க, நான் தெரிவேனா தெரிய மாட்டேனான்னு சந்தேகமா இருந்தது. ஆனா நான் நடிச்சதில பெஸ்ட்டாக இருக்கும். இப்ப நான் எங்க போனாலும் மணிகண்டன் பத்தி கேக்குறாங்க. அவர் கூட 2 நாள் தான் ஷூட். அப்பவும் தனித்தனியா வச்சு எடுத்தாங்க. உண்மையில மணி ரொம்ப ஹானஸ்டான மனிதர். அவர் கூட வேலை பார்த்தது சந்தோசம்” என்றார்