ADVERTISEMENT

தண்ணீர் பாட்டிலில் தனித்துவம்; ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் - களைகட்டும் நயன்-விக்கி திருமணம்!

05:39 PM Jun 08, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிகளுக்கு கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் நாளை(9.6.2022) மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது.

இதையடுத்து மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கோடி கணக்கில் பணம் கொடுத்து வங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த திருமண வீடியோ நன்றாக வரவேண்டும் என்பதற்காக அதை இயக்கும் பொறுப்பை இயக்குநர் கெளதம் மேனனிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நெருங்கிய நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்று குறுகிய வட்டத்தின் முன்னிலையில் தங்களது திருமணம் நடைபெறும் என விக்னேஷ் சிவன் கூறியிருந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணத்திற்கு வருபவர்கள் யாரும் தொலைபேசி எடுத்து வர கூடாது என்றும் அப்படி எடுத்து வந்தால் அதை பயன்படுத்தி எந்த விதமான புகைப்படமும் எடுக்க கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கான மொத்த ஒளிபரப்பு உரிமையையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதால் திருமணம் பற்றிய எந்தவிதமான புகைப்படமோ, வீடியோவோ வெளியே போய்விட கூடாது என்பதில் திட்டவட்டமாக உள்ளதாம் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம்.

இதனை தொடர்ந்து தங்களது திருமணம் தனித்துவமான இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்து பார்த்து செய்கிறதாம் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி. அதன்படி திருமணத்திற்கு வருபவர்கள் குடிக்கும் தண்ணீர் பாட்டிலிலிருந்து பார்க்கும் அனைத்து இடங்களிலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் புகைப்படங்கள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT