/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-3_15.jpg)
விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி முடித்துள்ளார். ஏப்ரல் 28-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகிறது. அடுத்து அஜித் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாக ஒரு பேட்டியில் நயன்தாரா சொல்லியிருந்தார்.
இந்நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற ஜூன் மாதம் தொடக்கத்தில் நயன்தாராவின் சொந்த ஊரான கேரளாவில் திருமணம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)