ADVERTISEMENT

ஓடிடி  ரிலீஸை உறுதி செய்த நயன்தாரா படக்குழு 

07:09 PM May 06, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையே நடிகை நயன்தாரா, இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜி.கே. விக்னேஷ் இயக்கும் ‘ஆக்சிஜன் (o2)’ படத்தில் நடித்துள்ளார்.ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது படக்குழு அதனை உறுதி செய்துள்ளது. அதன்படி ஹாட்ஸ்டார் ஓடிடியில் நேரடியாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT