'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா தற்போது ஆக்சிஜன் (O2) படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர்வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜி.கே. விக்னேஷ் இயக்கியுள்ளார்.ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டிவருகிறது.
ஒரு முழு பேருந்தும் மண்ணுக்குள் புதைந்து விடுகிறது. அதனால் பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால், சுவாசபிரச்சனைக்காகஎப்போது தன் மகனுடன் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரைபேருந்தில் இருக்கும் சக பயணிகள் குறிவைப்பதை அம்மாவான நயன்தாரா எப்படி சமாளிக்கிறார் என்பதேபடத்தின் கதை.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலான"சுவாசமே..."என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை ராஜேஷ் கிரிபிரசாத், மோகன் ராஜன் ஆகியோர் எழுத பிருந்தா பாஸ்கரன் பாடியுள்ளார். அம்மாவிற்கும் மகனுக்கும் இருக்கும் பந்தத்தை பிரதிபலிக்கும் வகையில் வெளியாகி உள்ள இப்பாடல் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.