ADVERTISEMENT

"சிட்டி சார்ந்த ஒரு கதை எடுக்க நினைத்தேன்" - முத்தையா

04:34 PM Nov 04, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள படம் 'ரெய்டு'. இப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்வில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, முத்தையா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநரும் இந்தப் படத்தின் வசனகர்த்தாவுமான முத்தையா, "கொம்பன், மருது போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கையை என் மீது கொடுப்போம் என 'ரெய்டு' படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்த சமயத்தில் 'டாணாக்காரன்' நல்ல ரீச் இருந்தபோது விக்ரம் பிரபு சாரிடம் படம் காட்டி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் தங்கச்சி பையன் சின்சியராக செய்திருக்கிறான். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. 'ரெய்டு' படம் நன்றாக வந்திருக்கிறது. தீபாவளிக்கு நல்லபடியாக வெற்றி பெற வேண்டும்" என பேசினார்.

நடிகர் விக்ரம் பிரபு, "நெகட்டிவிட்டியை வைத்துத்தான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைத்தான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்‌ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து, முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குநர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் (Non Linear) முறையில்தான், ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சி.எஸ் சூப்பராக கொடுத்துள்ளார்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT