Skip to main content

விக்ரம் பிரபுவுடன் மீண்டும் இணைந்த முத்தையா ... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Published on 01/02/2022 | Edited on 01/02/2022

 

Director Muthaiah has written the screenplay Vikram Prabhu tiger film

 

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் விக்ரம் பிரபு இயக்குநர் தமிழ் இயக்கும் 'டாணாக்காரன்' படத்தில் நடித்துவருகிறார். இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். எஸ்.ஆர். பிரபு தயாரிக்கும்  இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் 'டைகர்' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு சாம்  சி.எஸ் இசையமைக்க, திரைக்கதை மற்றும் வசனத்தை இயக்குநர் முத்தையா எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (1.2.2022) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 

 

விக்ரம் பிரபு நடிப்பில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் வெளியான 'புலிக்குத்தி பாண்டி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது 'டைகர்' படத்திற்கு முத்தையா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதரவளித்த ரசிகர்களுக்கு ‘இறுகப்பற்று’ படக்குழு நன்றி

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

irugapatru thanks note for fans support

 

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த்,  ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நிஜமாகவே ஒரு நல்ல மருத்துவரின் கவுன்சிலிங்கை கேட்டுவிட்டு வந்தது போல இருந்ததாகவும், படம் நேர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் பல தம்பதிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர். 

 

திரையரங்கு வெற்றிக்குப் பிறகு நவம்பர் 6 முதல் பிரபல ஒடிடி தளமான நெட்ஃபிக்ஸில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆனது. ஓடிடியிலும் பலரது கவனத்தை பெற்று டாப் 10 ட்ரெண்டிங் பட்டியலில் இறுகப்பற்று தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், பார்வையாளர்களின் ஆதரவிற்கு இறுகப்பற்று படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. இப்படம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Next Story

"சிட்டி சார்ந்த ஒரு கதை எடுக்க நினைத்தேன்" - முத்தையா

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

muthaiah speech at raid movie

 

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர்  முத்தையா வசனத்தில் அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள படம் 'ரெய்டு'. இப்படம் தீபாவளி வெளியீடாக வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்வில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, முத்தையா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். 

 

இயக்குநரும் இந்தப் படத்தின் வசனகர்த்தாவுமான முத்தையா, "கொம்பன், மருது போன்ற மண் சார்ந்த படங்களை முடித்துவிட்டு சிட்டி சார்ந்த ஒரு கதை எடுப்போம் என நினைத்திருந்தேன். அந்த நம்பிக்கையை என் மீது கொடுப்போம் என 'ரெய்டு' படத்தின் ஒரிஜினல் ரீமேக் உரிமையை வாங்கினேன். அந்த சமயத்தில் 'டாணாக்காரன்' நல்ல ரீச் இருந்தபோது விக்ரம் பிரபு சாரிடம் படம் காட்டி கேட்டேன். அவரும் ஒத்துக் கொண்டார். என் தங்கச்சி பையன் சின்சியராக செய்திருக்கிறான். என் பெயருக்காக இதில் பல பேர் வந்திருப்பது மகிழ்ச்சி. 'ரெய்டு' படம் நன்றாக வந்திருக்கிறது. தீபாவளிக்கு நல்லபடியாக வெற்றி பெற வேண்டும்" என பேசினார்.

 

நடிகர் விக்ரம் பிரபு, "நெகட்டிவிட்டியை வைத்துத்தான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைத்தான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்‌ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து, முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குநர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் (Non Linear) முறையில்தான், ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சி.எஸ் சூப்பராக கொடுத்துள்ளார்" என்றார்.