ADVERTISEMENT

'வாத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா; புதிய தகவல்

09:39 AM Jan 17, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்குத் தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் முதல் பாடலாக 'அடியாத்தி இது என்ன ஃபீலு... உன்னால நான் ஃபெயிலு...' என்ற பாடல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டாவது பாடலான நாடோடி மன்னன் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. வாத்தி திரைப்படம் கடந்த டிசம்பர் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், ஏப்ரல் மாதம் வெளியீடு தள்ளிப்போவதாக தெரியவந்தது. பிறகு பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அதே சமயத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், படம் வெளியாகுகிற பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் இசை வெளியீட்டு விழா வைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT