ADVERTISEMENT

'முருங்கைக்காய் சிப்ஸ்' ட்ரைலர் தேதி அறிவிப்பு!

05:19 PM Apr 06, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் சாந்தனு தற்போது, 'ராவணக் கோட்டம்', 'முருங்கைக்காய் சிப்ஸ்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில், ராவணக் கோட்டம் படத்தின் ஷூட்டிங் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளார் ரவீந்தர் சந்திரசேகரின் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடிக்க சாந்தனு ஒப்பந்தமானார்.

அந்தப் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். மேலும், பாக்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புதுமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சித் ஸ்ரீராம் பாடிய முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘முருங்கைகாய் சிப்ஸ்’ படத்தின் ட்ரைலர் நாளை மாலை 4.32 மணிக்கு வெளியாகவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT