அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்திருக்கிறார்.இது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதனைதொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

Advertisment

shanthanu

இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளது.

Advertisment

தளபதி 64 படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது.

Advertisment

அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி அடுத்த வருட கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் 300ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு மாலை ஐந்து மணிக்கு தளபதி 64 படத்திலிருந்து அப்டேட் விட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

alt="336" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="803c5890-ecae-48b1-8c7d-49931c51471f" height="171" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x90_10.jpg" width="382" />

அதில் முதள் நாள் அப்டேட்டில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்று வெளியானது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று வந்த அப்டேட்டில், அங்காமலி டைரீஸ் படத்தில் ஹீரோவாக நடித்த ஆண்டனி வர்கீஸும் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாளான இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இரண்டு அப்டேட்கள் விட இருக்கிறோம். அதில் முதல் அப்டேட்டாக சாந்தனுவும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்துள்ளது படக்குழு. சாந்தனு விஜய்யின் மிகப்பெரிய ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.