ADVERTISEMENT

"அவர்கள் இறக்கும் செய்தியை கேட்பது வேதனையாக இருக்கிறது" - பிக்பாஸ் முகேன் ராவ் வேதனை!

02:17 PM May 21, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், நடிகர் பிக்பாஸ் 3 புகழ் முகேன் ராவ் கரோனா விழிப்புணர்வு குறித்து சமூகவலைதளத்தில் பேசியுள்ளார். அதில்..

"மக்கள் இறக்கும் செய்தியைக் காண்பதும், கேட்பதும் வேதனையாக இருக்கிறது. இந்த தொற்று இன்னும் முடிவடையவில்லை. இதன் வளைவைத் தட்டையானதாக மாற்றும்வரை நாம் பாடுபட வேண்டும். கவனமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், மிக முக்கியமாக, வீட்டிலேயே இருங்கள். நாங்கள் உங்களுக்காகத்தான் அக்கறைகொள்கிறோம்” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT