mugen rao next movie update

மலேசியாவை சேர்ந்த தமிழரான முகின் ராவ், அங்கு சுயாதீன இசைக்கலைஞராக இருந்து, அதன் மூலம் சமூக வலைதளம் வாயிலாக தமிழ்நாட்டு இளைஞர்களிடமும் பிரபலமானார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெற்று கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான 'வேலன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் வெற்றி, மதில் மேல் காதல் என சில படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது.

Advertisment

இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாவது முறையாக மீண்டும் 'வேலன்' பட இயக்குநரான கவின் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜி.மணிக்கண்ணன் தயாரிக்க இன்னும் பெயரிடப்படவில்லை. இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாய் ஒன்று முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் நடைபெறவுள்ளது.

Advertisment

க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்திற்கு 'டாடா' பட இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். அடுத்த வாரத்தில் தொடங்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்படிப்பைஒரே கட்டமாக தொடங்கி நிறைவு செய்ய படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.