ADVERTISEMENT

27 வருடங்கள் ஆகியும் வத்தாத வத்திக்குச்சி; மாஸாக நடனமாடிய மன்சூர் அலிகான் 

06:32 PM Jun 25, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகக் குறுகிய கால கட்டத்திலேயே கமல், விஜய், போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார். பொதுவாக இவர் படத்தில் இரவு காட்சி, பிரியாணி, ஆக்சன், பழைய பாடல் உள்ளிட்டவற்றை வைத்து தனக்கான ஒரு டிரேட் மார்க்கை செட் செய்துள்ளார். இவரின் முந்தைய படமான கைதி படத்தில் "ஆசை அதிகம் வச்சு..." என்ற பாடலை பயன்படுத்தியிருப்பார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறவே சமீபத்தில் வெளியான விக்ரம் படத்திலும் "சக்கு சக்கு வத்திக்குச்சி..." என்ற பழைய பாடலை பயன்படுத்தியுள்ளார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான அசுரன் படத்தில் அருண்பாண்டியன், நெப்போலியன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு மன்சூர் அலிகான் மாஸாக நடனமாடியிருப்பார். இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வரும் நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மீண்டும் சக்கு சக்கு வத்திக்குச்சி என்ற பாட்டுக்கு நடனமாடி அதனை வெளியிட்டுள்ளார். பாடல் வெளியாகி 27 வருடங்கள் கழித்தும் அதே எனர்ஜியோடு மன்சூர் அலிகான் நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT