ADVERTISEMENT

அனகாவை காதலிக்கும் கௌரி கிஷன்; இணையத்தில் ட்ரெண்டாகும் 'மகிழினி' பாடல் 

12:29 PM Nov 24, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘நட்பே துணை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அனகா. சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிக்கிலோனா’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ‘காதல் மன்னன்னா..’ பாடலுக்கு இவர் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை அனகாவும், ‘96’ படத்தில் நடித்த கௌரி கிஷனும் இணைந்து, ஓரின சேர்க்கையாளருக்கு ஆதரவாக உருவாகியுள்ள 'மகிழினி' என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளனர். இப்பாடலை ‘கோப்ரா’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிவரும் பாலசுப்பிரமணியன் இயக்கியுள்ளார். இதில், தன்பால் ஈர்ப்புகொண்ட இரு பெண்கள் காதலித்து திருமணம் செய்துகொள்வதை தம் பெற்றோருக்கு உணர்த்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மதன் கார்க்கி வரிகளில், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

மேலும், ‘மகிழினி’ இசை ஆல்பம் குறித்து இயக்குநர் கூறுகையில், "ஓரின சேர்க்கையாளர்களைப் பற்றி சமுதாயத்திற்குப் புரியவைக்க வேண்டும் என்பதுதான் ‘மகிழினி’யின் பின்னணியின் எண்ணமாகும்" என தெரிவித்துள்ளார். ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்பாடல், யூடியூப் தளத்தில் 9 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT