Karthik Subbaraj Presents Vaibhav, Anagha Starring Buffoon movie trailer released

Advertisment

'காட்டேரி' படத்தை தொடர்ந்து வைபவ் நடித்துள்ள படம் ‘பபூன்’. அறிமுக இயக்குநர் அசோக் வீரப்பன் இயக்கியுள்ள இப்படத்தில் அனகா, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிடுகிறார்.

இந்நிலையில் ‘பபூன்’ படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கையில், மேடை நாடகங்களில் நடித்து வரும் வைபவ் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதை சஸ்பென்ஸ் கலந்து திரில்லிங்குடன் சொல்லியிருப்பது போல் தெரிகிறது. குறிப்பாக காவல்துறையிடம் வைபவ், "என்ன சார் கொலையா பண்ணிட்டோம். இதனால வெளிநாடு செல்ல முடியாது அவ்ளோதான சார்" என்று கேட்க, இதுக்கு நீங்க கொலையே பன்னிருக்கலாம் என்று போலீஸ் கூறும் வசனம் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. இப்படம் வருகிற 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது.