ADVERTISEMENT

கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.1,01,00,000 வழங்கும் லைகா நிறுவனம் !

05:47 PM Nov 20, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

கஜா புயல் தாக்கியதில் தமிழக டெல்டா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலகை சேர்ந்த நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சமும், விஜய் சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும், ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் ரூ.50 லட்சமும், வைரமுத்து சார்பில் ரூ.5 லட்சமும், விஜய் ரசிகர் மன்றம் சார்பாக ரூ.6.5 லட்சமும் நிவாரணம் வழங்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1,01,00,000 வழங்கவுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்.. "கஜா புயலால் 7 மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது புயலின் மீட்பு நடவடிக்கைகளுக்காகவும், மக்களின் துயர் துடைக்கவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், லைக்கா குழுமம் ரூ.1,01,00,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT