/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/101_19.jpg)
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை உலக அளவில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' படக்குழு ஒரு புது போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும் நாளை (28.12.2022) மாலை 4 மணிக்கு ஒரு ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிடவுள்ளதாகத்தெரிவித்துள்ளது. இதற்கு முன்னால் வெளியான போஸ்டரில் 'பொன்னியின் செல்வன் 1' என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில் வெறும் 'பொன்னியின் செல்வன்' மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு அந்தப் பதிவில், என்ன அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்களிடம் படக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. அதனால் 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டாக இருக்கும்என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Something special is on the horizon. Can you guess what?#PS#PonniyinSelvan#ManiRatnam@arrahman@madrastalkies_@LycaProductions@Tipsofficial@tipsmusicsouth@IMAX@PrimeVideoINpic.twitter.com/JCOSL4ISgW
— Lyca Productions (@LycaProductions) December 27, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)