ADVERTISEMENT

லோகேஷ் கனகராஜ் நிறுவனத்தின் முதல் பட அப்டேட்!

06:32 PM Nov 29, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து ரஜினியின் 171வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். அதற்கான கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர்.

இதனிடையே லோகேஷ் கனகராஜ் ‘ஜி-ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக நேற்று முன்தினம் தெரிவித்தார். அப்போது முதல் படம் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அதோடு முதல் படத்தின் அப்டேட்டுகள் விரைவில் வெளிவரும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து நேற்று, ‘ஜி-ஸ்குவாட்’ நிறுவனத்தின் முதல் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். உறியடி படம் மூலம் பிரபலமான விஜய்குமார் நடிக்கும் படத்தை தயாரிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘ஃபைட் கிளப்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அப்பாஸ் ஆர் அஹ்மத் இயக்கியுள்ளார். இவர் உறியடி மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். கோவிந்த வசந்தா இசை பணிகளை மேற்கொள்கிறார். இப்படம் ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னையில் படப்படிப்பு தொடங்கி நடத்தப்பட்டது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த சூழலில் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT