suriya about fight club tamil movie

உறியடி விஜய்குமார் நடிப்பில் அப்பாஸ் ஆர். அஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபைட் கிளப்’. இப்படத்தில் கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ்உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரீல் குட் ஃபிலிம் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது ஜி-ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் முதல் படமாக வழங்குகிறார். நேற்று (15.12.2023) திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

Advertisment

இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு தெரிவித்தார். அவர் கூறுகையில், “ஃபைட் கிளப் படத்தை ரசித்தேன். அற்புதமான காட்சிகள், எடிட், இசை, நடிப்பு என ஒரு ராவான ஆக்‌ஷன் படம். இயகுநருக்கு சிறந்த அறிமுகம். விஜயகுமார் ஒரு பெரிய வெற்றி பெற வேண்டும்.ஹீரோவாக உயர வேண்டும் என்பது எப்போதும் இருக்கும். இந்தப் படம் அவரை அங்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டு படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில் சூர்யா இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஃபைட் கிளப், ஒரு ஸ்டைலிஷான ஆக்‌ஷன் படம். விஜயகுமார் செல்வாவாக நடித்ததை ரசித்தேன். குட் ஜாப் அறிமுக இயக்குநர் அப்பாஸ் மற்றும் இளம் தொழில்நுட்ப குழு” எனப் பாராட்டியுள்ளார்.