ADVERTISEMENT

"கருவினில் என்னை சுமந்தாய்..." டூ "அகிலம் நீ..." - கவனம் ஈர்க்கும் 'கே.ஜி.எஃப் 2' பாடல்

01:18 PM Apr 06, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் "அகிலம் நீ..." என்ற அம்மா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு அம்மா சென்டிமெண்டும், அம்மா பாடலும் முக்கிய பங்காக இருந்தது. ரசிகர்களிடையே பிரபலமான அந்த பாடல் அம்மாவை பிரிந்து வாழும் மகன்களின் காலர் ட்யூனாகவே மாறி போனது. அந்தவகையில் தற்போது 'கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் அகிலம் நீ என்ற அம்மா பாடல் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT