ADVERTISEMENT

கே.ஜி.எஃப்- 2 படமும், ஆர்.ஆர்.ஆர் படமும் ஒரே நாளில் வெளியீடா? யாஷ் விளக்கம்...

04:12 PM Mar 09, 2020 | santhoshkumar

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்து மொழிகளில் பிரம்மானடமாக வெளியான படம் கே.ஜி.எஃப். வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றிகரமாக ஓட, கே.ஜி.எஃப் 2 படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங்கானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று சொல்லப்பட்டுவருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதேபோல பாகுபலி, பாகுபலி 2 ஆகிய பிரம்மாண்ட திரைப்படங்களை எடுத்தபின் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் மேலும் ஒரு பிரம்மானட படம் ஆர்.ஆர்.ஆர். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. முதலில் இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2021 ஜனவரி மாதம் சங்கராந்தி வெளியீடாகப் படம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது ஆர்.ஆர்.ஆர். படக்குழு.

இதனையடுத்து ‘கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகமும் 2021 சங்கராந்தி வெளியீடாக வரும் என்று செய்திகள் வந்தது. இந்தியாவின் இரண்டு பிரம்மாண்ட பட்ஜெட் படங்களும் ஒரே நாளில் வெளியானால் வணீக ரீதியாகவும் சிக்கல் இருக்கும், தியேட்டர்களில் படங்களுக்கு சரியாக திரையரங்குகள் கிடைக்காது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் ஓட.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் யாஷ் ஒரு பேட்டியில் தெளிவுப்படுத்தியுள்ளார். “'ஆர்.ஆர்.ஆர்', 'கேஜிஎஃப் 2' இரண்டு படங்களின் இந்திப் பதிப்புகளையும், முன்னணி பாலிவுட் விநியோகஸ்தர் அனில் தந்தானி வெளியிடவுள்ளார். எனவே, இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் பேச்சுக்கே இடமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT