ADVERTISEMENT

“விஜயகாந்தின் அந்த ஒரு வார்த்தை எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்” - கார்த்திக் சுப்புராஜ்

03:01 PM Jan 06, 2024 | kavidhasan@nak…

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில், விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, விஜயகாந்த்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

ADVERTISEMENT

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் படம் எடுப்பதற்கு முன்னாடி குறும்படம் எடுத்திட்டிருந்த டைம், அவருடைய டிவியில் ஒரு குறும்பட போட்டிக்காக அனுப்பியிருந்தேன். அப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய படம் பார்த்துவிட்டு கண்டிப்பா நீ படம் பண்ணிடுவப்பா... என்று சொன்னார். அந்த ஒரு வார்த்தை எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதன் பிறகு அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. மதுரையிலிருந்து வந்து இவ்ளோ பெரிய லெஜண்டா வந்திருக்காரு. அவருடைய இழப்பு சினிமா துறைக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு” என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT