ADVERTISEMENT

”இதைச் சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்” - ’பொன்னியின் செல்வன்’ ரகசியம் உடைத்த கார்த்தி

12:39 PM Aug 01, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் நடிகர் கார்த்தி பேசுகையில், “இந்த இடத்தில் பொன்னி நதி பாடலை வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சி. இது தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். இந்தப் படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். ஆனாலும் படம் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கான ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது. இந்த படம் எடுத்தது பெரிய சுவாராஷ்யம். நான், ஜெயராம் சார், ஜெயம் ரவி மூவரும் ஒன்றாக வரும் காட்சிகள் அதிகமாக இருந்தன. ஜெயராம் சார் மிகச்சிறந்த நடிகர். அவருடன் பணிபுரிந்தது பெரும் பாக்கியம். ஜெயராம் சார் நடிக்கும் நம்பி கதாபாத்திரத்தின் உயரத்திற்காக அவர் சில விஷயங்களைச் செய்துள்ளார். அதை நீங்கள் பார்த்தால் கண்டிப்பாக பிரமிப்பு உருவாகும். இந்த பாடல் பொன்னி நதியை படமாக்கியது மிகப்பெரிய அனுபவம். அன்றைய பொன்னி நதி தான் இன்றைய காவிரி. இந்த படம் பல சிக்கல்களைக் கடந்து உருவானது. அதற்கு முழு காரணம் மணிரத்னம் சார்தான். அவர் 120 நாளில் இரண்டு பாகங்களையும் எடுத்து முடித்துவிட்டார். இதை யாரும் நம்பமாட்டார்கள். இது போன்ற படத்தை மீண்டும் ஒருவர் எடுப்பதற்கு குறைந்தது 10 வருடம் ஆகும். இந்தப் பாடலை ரகுமான் அவர் குரலில் பாடியுள்ளார், இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். பாடல் கேட்கும் போதே சோழ தேசத்துக்கு போன மாதிரி இருந்தது. இந்த படம் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது, அதற்கு லைகா சுபாஸ்கரனுக்கு நன்றி சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்து போக முயற்சி செய்பவர் சுபாஸ்கரன். அவர் இந்த திரைப்படத்திற்காக பல கடுமையான முயற்சிகளை கொடுத்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT