ADVERTISEMENT

யுவனுக்கு நடிகர் கார்த்தி கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு

10:07 AM May 23, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்திவீரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிகராக அறிமுகமானார். மதுரை கதைக்களத்தை மையமாக வைத்து உருவான இப்படத்தின் இசையில் யுவன் சங்கர் ராஜா மிரட்டியிருப்பார். இப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான 'நான் மகான் அல்ல', 'பையா', 'பிரியாணி', 'சுல்தான்' உள்ளிட்ட படங்களுக்கு யுவன் இசையமைத்திருந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கார்த்தியும் யுவன் சங்கர் ராஜாவும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்பதால் இருவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி யுவன் சங்கர் ராஜாவுக்கு அன்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். யுவன் சங்கர் ராஜா திரையுலகில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி நடிகர் கார்த்தி விலை உயர்ந்த பிரீமியம் கை கடிகாரத்தை பரிசளித்து நட்பு பாராட்டியுள்ளார். கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள 'விருமன்' படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT