/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/425_4.jpg)
சூர்யாவின் '2டி எண்டர்டெய்ன்மென்ட்' தயாரிப்பில் இரண்டாவது முறையாக கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. முத்தையா இயக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் 'கஞ்சா பூவு கண்ணால' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
'விருமன்' படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் எனத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை கார்த்தி தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். விருமன் படம் ரிலீஸாகும் அதே தேதியில் விஷாலின் 'லத்தி' படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)