ADVERTISEMENT

வசூல் சாதனையில் 'கர்ணன்' படம்! உற்சாகத்தில் படக்குழு!

12:34 PM Apr 12, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லால், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. திரையிட்ட இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. இருந்தும் 10ஆம் தேதி முதல் கரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று தமிழக அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பினால் 'கர்ணன்' படத்தின் வசூலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம் எழுந்த நிலையில், இப்படம் தமிழகத்தில் முதல் மூன்று நாட்களில் 23 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக 'கர்ணன்' அமைந்துள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ.10 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. இருந்தும் தற்போது உள்ள சூழல் காரணமாக 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளித்திருப்பதால் வசூல் சற்று குறைந்துள்ளது. மேலும், திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருந்தால் கண்டிப்பாக பெரிய வசூல் சாதனையை 'கர்ணன்' படம் நிகழ்த்தியிருக்கும் என்று திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT