ADVERTISEMENT

ராஜராஜ சோழன் இந்துவா? சினிமாவுக்கு வந்தோமா, வேலைய பார்த்தோமான்னு இருங்க.. - கஞ்சா கருப்பு காட்டம் 

05:50 PM Oct 08, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஓங்காரம் படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன், தயாரிப்பாளர் கே.ராஜன், கஞ்சா கருப்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய கஞ்சா கருப்பு, “ஒரு நாள் தயாரிப்பாளர்களாக இருந்து பாருங்கள், அவர்களுடைய வேதனை என்னவென்று உங்களுக்கு தெரியும். திடீர்ன்னு ஆப்பிள் கேட்கிறது, ஆரஞ்சு கேட்கிறது.. அங்க போய் சிக்கன் வாங்கிட்டுவான்னு சொல்லுவாங்க. சாப்பாடு தண்ணி இல்லாமல் நான் நடிக்க தயார் நீங்கள் நடிப்பீர்களா. கேமரா முன்னாடிதான் நான் சாகவேண்டும் என்று இன்றுவரை நினைத்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் சினிமாவுக்குத்தான் எனது மூச்சு, அவ்வளவு கஷ்டப்பட்டு, என் வீட்டை விற்று, காரை விற்று படம் தயாரித்தேன். ஆனால் கடைசியில் அந்த படம் பெருசா ஓடவில்லை. உடனே எங்க அம்மாகிட்ட போய் இப்படியெல்லாம் நடந்து விட்டது என்றேன். அதற்கு எங்க அம்மா, 'மகனே நீ பள்ளி கூடத்துக்கு போய் படிக்கல, அதுக்கு பதிலா இவ்வளவு காசு செலவழித்து உன் வாழ்க்கை படிச்சுருக்கன்னு நெனச்சுக்கோ, அடுத்த படத்துல விட்டதா புடிச்சிடலாம்'னு ஆறுதல் சொன்னாங்க. போதும் இதோட நிறுத்திக்கலாம், ஏன்னா என்னுடைய சொந்த பிரச்சனையை பற்றி பேசினோம் என்றால் எக்மோரில் இருந்து மதுரை வரைக்கும் பேசலாம்.

சினிமா துறையில் ஏதாவது சொன்னோம் என்றால், அது பெரும் சர்ச்சையாக மாறி விடுகிறது. அதனால் சரியாக பேச வேண்டும். அதை விட்டுவிட்டு ராஜராஜ சோழன் இந்துவா... இல்லையா என பேசி வருகிறார்கள். இதெல்லாம் நமக்கு தேவையா, சினிமாவுக்கு வந்தோமா.. வேலைய பார்த்தோமா.. 10 வீட்டை வாங்குனோமா என்று இல்லாமல் எதற்கு தேவையில்லாத பேச்சு" என கூறினார்.

இறுதியாக படத்தின் கதாநாயகியை பற்றி பேசிய அவர், அந்த நடிகை ஒரு லட்சம் கொடுத்தால்தான் இசை வெளியிட்டு விழாவிற்கு வருவேன்னு சொன்னார்களாம். ஏன் இப்படி பண்றாங்கன்னு தெரியவில்லை. விழாவிற்கு வந்திருந்தாள் அவருக்கு ப்ரோமோஷன்தானே என்று சொல்லிவிட்டு முகம் சுளிக்கும் வகையான வார்த்தையால் வசைபாடினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT