viduthalai part 2 release update

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர்.

Advertisment

இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி உள்ளிட்டோர் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இப்படத்தில் கிட்டத்தட்ட 10 நிமிடம்கட் எதுவும் இல்லாமல் சிங்கிள் ஷாட்டாக இடப்பெற்ற அறிமுக காட்சியின் மேக்கிங் வீடியோவை அண்மையில் படக்குழு வெளியிட்டது. பின்பு தமிழில் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கில் அல்லு அரவிந்த் வெளியிடுகிறார். வருகிற 14 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே மக்களுக்கு நன்றி தெரிவித்து விடுதலை 2 விரைவில் வரும் என சூரி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Advertisment

இதனால் விடுதலை 2ஆம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்து எதிர்பார்ப்பை கூட்டியிருப்பார் வெற்றிமாறன். அதனால் இரண்டாம் பாகத்திற்கு ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அதுகுறித்தபுது தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இன்னும் 20 நாள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறதாம். அதனை மிக விரைவில் தொடங்கி முடித்துவிட்டு வருகிற ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.