ADVERTISEMENT

அப்போ ஜெயலலிதா, இப்போ இந்திரா காந்தி; 'எமர்ஜென்சி'யை கையில் எடுத்த கங்கனா

12:49 PM Jul 14, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தமிழில் தாம் தூம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'தாகட்' திரைப்படம் மோசமான வரவேற்பைப் பெற்று பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. 90 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ. 5 கோடி கூட வசூல் செய்யவில்லை எனப் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து இழந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க நடிகை கங்கனா இந்திய முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை 'எமர்ஜென்சி' என்ற பெயரில் இயக்கி நடித்து வருகிறார். கடந்த 19975 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்திய போது நடந்த நிகழ்வுகள் இப்படத்தில் இடம்பெறும் என தெரிகிறது. இப்படத்தை கங்கனாவே தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி அவர்களின் கெட்டப்பில் அச்சு அசலாக அப்படியே தோன்றியுள்ளார். இது பலரின் கவனத்தை பெற்று வருகிறது. அத்துடன் படக்குழு க்ளிம்பஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடிகை கங்கனா தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் தலைவி படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது இந்திரா காந்தியாக நடிப்பது பலரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT