/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/302_19.jpg)
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள்ஒருவராக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர்அவ்வப்போதுசர்ச்சையான கருத்துக்களைதெரிவித்து வழக்குகளில் சிக்கி கொள்வதுவழக்கம். அந்த வகையில்கடந்த 2020 ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன்னை பற்றி அவதூறாக நடிகை கங்கனாபேசியதாக பாடலாசிரியர் ஜாவித் அக்தர் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்துஇவ்வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க கோரி நடிகைகங்கனாநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது பணியை கருத்தில் கொண்டு நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்எனக் கூறப்பட்டிருந்தது.
இதனைவிசாரித்த நீதிமன்றம்கங்கனாரணாவத்மனுவை தள்ளுபடி செய்ததோடு, குற்றம்சாட்டப்பட்டவர் தனது சொந்த காரணங்களை காட்டி சட்ட விதிமுறைகளில் இருந்துவிலக்கு பெற முடியாது. கங்கனாபிரபல நடிகையாக இருக்கலாம். ஆனால் இந்த வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டவர் எனக் கடுமையாக சாடியுள்ளது. மேலும் இவ்வழக்கில் அவர் நிரந்தரமான விலக்கு கோர முடியாது என்றும்,கங்கனாரணாவத்முறையாகஜாமீன்நிபந்தனைகளைபின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)