ADVERTISEMENT

"தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு இது" - கமல்ஹாசன் வேதனை!

03:49 PM Apr 17, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று (16.04.2021) சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், பிரபலங்கள் பலரும் நேரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக்கின் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

"நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல், தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு" என பதிவிட்டுள்ளார். நடிகர் விவேக் கமல்ஹாசனுடன் இதுவரை இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT