actor kamalhassan tweet tn govt

Advertisment

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மே- 07 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு நேற்று (04/05/2020) அறிவித்திருந்தது.

actor

டாஸ்மாக் கடையைத் திறக்கும் அரசின் முடிவுக்குத் திமுக, காங்கிரஸ், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களைப் பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு. கோயம்பேட்டை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு இப்போது டாஸ்மாக்கைத் திறக்குமாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.