ADVERTISEMENT

புதிய தொழில்நுட்பம் மூலம் இளமையாக மாறும் கமல்!

03:55 PM Jul 28, 2021 | santhosh

ADVERTISEMENT

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனை நாயகனாக வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கமல்ஹாசன் கவனம் செலுத்திக்கொண்டிருந்த வேளையில், இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வந்தார். அதன் பிறகு ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாகப் படத்தின் பணிகளை முழுவீச்சில் தொடங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து, படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு தயாராகிவந்தது. இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

ADVERTISEMENT

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என மூவரும் மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலான நிலையில், 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசன் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஃப்ளாஷ்பேக் பகுதியில் கமல்ஹாசன் சுத்தமாக ஷேவ் செய்த இளமையான தோற்றத்தில் வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஹாலிவுட் படமான 'ஐரிஷ்மேன்' உள்ளிட்ட சில படங்களில் பயன்படுத்தப்பட்ட டீ - ஏஜிங் என்ற புதிய தொழில்நுட்பத்தை 'விக்ரம்' படத்தில் உபயோகப்படுத்தி, நடிகர் கமல்ஹாசனை இளமை தோற்றத்தில் மாற்றி திரையில் தோன்றவைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது சாத்தியமாகும்பட்சத்தில், இப்படம் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT