Again a grandeur; kamalhaasan in 'Vikram' on world's tallest screen

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் அமர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீசிற்கு சில நாட்களே உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

அந்தவகையில், 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் உலகின் உயரமான திரையில் திரையிடப்படவுள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இப்படத்தின் ட்ரைலரை நாளை இரவு 8.10 மணிக்குத் திரையிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாகத் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் ப்ரோமோவை ஒரு பிரம்மாண்ட மேடையில் வெளியிடப்போவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment